சென்னையில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னை, கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பயணி ஒருவரின் உடைமைகளில், கோகைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் மூன்றரை கிலோ எடை கொண்ட அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.35 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பயணியை கைது செய்து, சுங்கத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த இளைஞரை கைது செய்து, டெல்லி, மும்பையைச் சேர்ந்த இருவரை பிடிக்கும் பணியில் சுங்கத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மூலக்கதை
