தவெக நிர்வாகி திடீர் தற்கொலை: கரூர் சம்பவம் காரணமா?

  தினத்தந்தி
தவெக நிர்வாகி திடீர் தற்கொலை: கரூர் சம்பவம் காரணமா?

விழுப்புரம் கரூர் மாவட்டத்தில் விஜய்யின் அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் ‘இதற்கு யார் பொறுப்பு?’ என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருந்தாலும் அதுகுறித்த உண்மை நிலை, முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும். இருந்தாலும் இந்த சம்பவத்தில் அனைத்து மட்டத்திலும் சட்டங்கள் மீறப்பட்டு உள்ளன. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் அடுத்த விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தவெக கிளை செயலாளர் அய்யப்பன் (வயது 52) திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலையும், கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் துயர சம்பவம் குறித்து ஆதங்கமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை