இனி மொழி பிரச்சினை இல்லை: வாட்ஸ் அப்பில் வருகிறது சூப்பர் அப்டேட்

சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆடியோ, வீடியோ, பிடிஎப் பைல்கள் அனுப்பும் வசதி, வாட்ஸ் அப்பில் வீடியோக்கள், புகைப்படங்களை ஸ்டேட்டசாக வைக்கும் வசதி என பலப்பல அப்டேட்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது. அதாவது, பயனர்கள் அனுப்பும் மெசேஜ் எந்த மொழியில் இருந்தாலும் அதை மொழிமாற்றம் செய்து தெரிந்த மொழியில் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. முதல் கட்டமாக ஆங்கிலம், இந்தி, அரபிக், ஸ்பானிஷ் உள்ளிட்ட 19 மொழிகளில் இந்த சேவை கிடைக்க உள்ளது.
மூலக்கதை
