யு.பி.ஐ மூலம் தனிநபர் கணக்கிற்கு அதிகபட்சம் எவ்வளவு அனுப்பலாம்? – முழு விவரம்

  தினத்தந்தி
யு.பி.ஐ மூலம் தனிநபர் கணக்கிற்கு அதிகபட்சம் எவ்வளவு அனுப்பலாம்? – முழு விவரம்

இன்றைய டிஜிட்டல் காலத்தில், யு.பி.ஐ வாயிலாக பண பரிவர்த்தனைகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை யு.பி.ஐ வழியாக பணம் செலுத்தும் வசதி உள்ளது. சில வினாடிகளில் பணம் அனுப்பிவிட முடியும் என்பதால், பயனர்கள் மத்தியில் யு.பி.ஐ பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யு.பி.ஐயில் பயனர்களின் நலன் கருதி அவ்வப்போது புதிய அப்டேட்களையும் NPCI (என்பிசிஐ) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் வருமாறு: தனிநபர் பரிவர்த்தனை: ரூ.1 லட்சம் மருத்துவ கல்வி கட்டணம்: ரூ.5 லட்சம் பங்குச் சந்தை, காப்பீடு: ரூ.10 லட்சம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை: ரூ.10 லட்சம் (முன்பு ரூ.2 லட்சம்) கிரெடிட் கார்டு கடன் திருப்பிச் செலுத்துதல்: ரூ.6 லட்சம் (முன்பு ரூ.2 லட்சம்) நகை வாங்கும் பரிவர்த்தனை: ரூ.6 லட்சம் (முன்பு ரூ.1 லட்சம்) வங்கியில் டெப்பாசிட் செய்வது: ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.

மூலக்கதை