அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலை சிகரத்துக்கு தலாய் லாமா பெயர்- சீனா எதிர்ப்பு, Arunachal is named after the Dalai Lama
புதுடெல்லி:கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் நிலவியது. பின்னர் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எல்லையில் சில பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன. இதற்கிடையே இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லை தொடர்பாகவும், இந்தியா-சீனா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.இந்தநிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை செல்லாத மலைச்சிகரம் ஒன்றுக்கு தேசிய மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் (நிமஸ்) ஒரு குழுவினர் சாகசப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வெற்றிகரமாக 20,942 அடி உயரத்தில் உள்ள அதன் உச்சியை அடைந்தனர். இதையடுத்து அந்த சிகரத்துக்கு சாங்யாங் கியாட்சோ என ஆறாவது தலாய் லாமா பெயரை சூட்டினர். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்,ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவுக்கு உரிய பகுதியாகும். அப்பகுதியில் உள்ள இடத்துக்கு இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம். இதுவே சீனாவின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
