இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் நகர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு! - லங்காசிறி நியூஸ்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. விக்ரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.