‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ ஏஐ துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
புதுடெல்லி, அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அளிப்பதற்காக ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனம் அமைக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-10 ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்சுக்கு டிஜிட்டல் சேவைகள் ஒரு புதிய வளர்ச்சி எந்திரமாக இருந்தது. தற்போது, எங்களுக்கு முன்பு உள்ள வாய்ப்பாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளது. நாட்டில் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் சேவை கிடைப்பதை ஜியோ உறுதி செய்தது. அதுபோல், அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் பிரமாண்ட அளவில் ஏ.ஐ. உள்கட்டமைப்பை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் உருவாக்கும். பசுமை ஆற்றலால் இயக்கப்படும் ஜிகாவாட் அளவிலான, ஏ.ஐ. தயார் தரவு மையங்களை அமைக்கும். ஜாம்நகரில் ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. இந்தியாவின் வளரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த வசதிகள் படிப்படியாக வழங்கப்படும். இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏ.ஐ. உள்கட்டமைப்பை உருவாக்குதல், உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குதல், இந்தியாவுக்கு ஏ.ஐ. சேவைகளை கட்டமைத்தல், ஏ.ஐ. திறனை வளர்த்தல் ஆகியவைதான் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸின் 4 தெளிவான நோக்கங்கள். வாடிக்கையாளர்கள், சிறு வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நம்பகமான, பயன்படுத்துவதற்கு எளிதான ஏ.ஐ. சேவைகளை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் வழங்கும்.கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு தீர்வுகள் அளிக்கும். ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் சேவை கிடைக்கும். ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை ‘புதிய காமதேனு’ என்று சொல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
