பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  தினத்தந்தி
பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் தாமதக் கட்டண தள்ளுபடி 30 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு 100 சதவீதம் தாமத கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடுகள் புதுப்பிப்புக்கு கட்டண விலக்கு பொருந்தாது. பிரீமியம் செலுத்தாத நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான பாலிசிகள் இதற்கு தகுதியானவை. அக்டோபர் 17-ந்தேதிவரை இந்த சிறப்பு திட்டம் அமலில் இருக்கும் என எல்.ஐ.சி. அறிவித்துள்ளது.

மூலக்கதை