மத்திய அரசு வைத்த செக்; டிரீம் 11 பயனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

  தினத்தந்தி
மத்திய அரசு வைத்த செக்; டிரீம் 11 பயனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பிரபல ஆன்லைன் கேமிங் தளமான டிரீம் 11 நிறுவனம் தனது தளத்தில் பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளை முற்றிலுமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரீம் 11 நிறுவனம்தான் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிரீம் 11 நிறுனம் இனி பேன் கோட் போன்ற ரியல் மணி கேமிங் சாராத செயல்பாடுகளில் முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சட்ட ஒப்புதல் பெற்றால், ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியுள்ளதால் , டிரீம் 11 நிறுவனம் தனது தளத்தில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளை முற்றிலுமாக நிறுத்தத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை