ஸ்மார்ட் போன்களில் வந்த புதிய அப்டேட்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது காலம் மாறிவிட்டது. அதிலும் ஆண்ட்ராய்டு போன்கள் வந்த பிறகு பேசுவதற்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு சாதனமாகவே செல்போன்கள் மாறிவிட்டன. உள்ளங்கைக்குள் உலகம் ஒன்று சொன்னது தற்போதுதான் 100 சதவீதம் பொருந்துகிறது என நினைக்கும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களில் பார்த்துவிட முடிகிறது. ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்கள் முன்னிலை வகிக்கின்றன. உலகின் பெரும்பாலான ஸ்மார்ட்போன் சந்தையை இந்த இரு இயங்குதளங்களே கட்டுப்பாட்டில் வைத்து இருக்கக்கூடிய நிலையில், அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளுக்காக தோன்றும் முகப்புப் பக்கம் மாறியிருக்கிறது. Caller Interface என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த முகப்பு மாறியிருப்பது ஆண்ட்ராய்டு பயனர்கள் பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. அழைப்புகள் வந்தால் ஏற்பதற்கு மேலே ஸ்வைப் செய்யும் முறை இருந்தது, தற்போது பக்கவாட்டில் ஸ்வைப் செய்வது போன்று மாறியிருக்கிறது. இந்த புதிய வசதியால் அழைப்புகள் வரும் போது எப்படி அதை ஏற்பது என தெரியாமல் குழம்பிப்போவதாக நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
