சூடுப்பிடிக்கும் இலங்கை தேர்தல் களம் - அதிகரிக்கும் புகார்கள் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
சூடுப்பிடிக்கும் இலங்கை தேர்தல் களம்  அதிகரிக்கும் புகார்கள்  லங்காசிறி நியூஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 65 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 23 வரை மொத்தம் 901 தேர்தல் புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதில் தேசிய தேர்தல் தொடர்பான புகார்கள் மேலாண்மை மையத்திற்கு கிடைத்த 427 புகார்களும், மாவட்ட மையங்களில் பெறப்பட்ட 474 புகார்களும் உள்ளடங்குவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.குறித்த ஜனாதிபதி தேர்தல் வருகிற செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை