விண்வெளி கழிவுகளின்றிச் செயல்படுத்தப்பட்ட பிஎஸ்எல்வி ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தகவல்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பசிபிக் பெருங்கடலில் கடந்த 21-ம் தேதி மதியம் 2.04 மணிக்கு பிஎஸ்-4 நிலை இறக்கப்பட்டதாகவும் இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்திட்டத்தின் பிரதானச் செயற்கைக்கோளான எக்ஸ்போசாட்டில், எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

 

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசியோபியா-ஏ என்ற விண்மீன் வெடிப்பின் (சூப்பா் நோவா) துகள்களிலிருந்து வெளிப்படும் ஒளியை எக்ஸ்பெக்ட் கருவி படம் பிடித்தது. அதேபோன்று போலிக்ஸ் கருவி விண்வெளியில் உள்ள நியூட்ரான் விண்மீன்களிலிருந்து வெளியேறும் ஊடு கதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ முனைப்பு அளவை ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை