கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாகப் பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இஸ்ரோ ஸ்டார்ட் திட்டம் 2024; விண்வெளி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

 

இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை (UG/PG) படிப்புகளை வழங்கும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START)-2024ஐ நடத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) திட்டமிட்டுள்ளது.

 

START-2024 திட்டம், ஏப்ரல்-மே, 2024 இல் நடத்தப்படும், இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு அறிமுக நிலை ஆன்லைன் பயிற்சியாகும்.

 

 

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ கல்வி நிறுவனங்களில் இயற்பியல் அறிவியல் (இயற்பியல் மற்றும் வேதியியல்) மற்றும் தொழில்நுட்பம் அதாவது மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல், பயன்பாட்டு இயற்பியல், ரேடியோபிசிக்ஸ், ஒளியியல் மற்றும் ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ், கருவியியல் மற்றும் பிற தொடர்புடைய பாடங்களைப் படிக்கும் முதுகலை மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

 

இஸ்ரோ முன்முயற்சியின் ஒரு பகுதி

 

நிறுவனங்களில் படிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை, அவர்களின் திறன், தகுதி/கல்வி செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ISRO/DoS க்கு ISRO பரிந்துரைத்தபடி ஒரு வடிவத்தில் அனுப்ப வேண்டும்.

 

 

இஸ்ரோ முன்முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள், ஏப்ரல் 2, 2024க்குள் jigyasa.iirs.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலம் START-2024 பயிற்சியை நடத்தத் தங்கள் ஆர்வத்தை அனுப்ப வேண்டும்.

 

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதுகலை மற்றும் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் ஜிக்யாசா போர்ட்டல் மூலம் ஏப்ரல் 8 மற்றும் 12, 2024க்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். START திட்டம் ISRO E-CLASS தளமான https://eclass.iirs.gov.in என்ற இணையப் பக்கம் மூலம் நடத்தப்படும். 

 

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் ISRO START திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஒரு மூத்த ஆசிரியர்களை அடையாளம் காண, நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் (இணைப்பு-1) பொருத்தமான நியமனக் கடிதத்தின் இணைப்புடன் தங்கள் நிறுவனத்தை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இஸ்ரோ START-ஐ நடத்துவதற்கு நிறுவனத்தில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்களைச் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் வழங்க வேண்டும்.

மூலக்கதை