தனிநபர் புரட்சியால் உருவான 1,360 ஏக்கர் வனச் சரணாலயம்!.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஜாதவ் பயேங் - இவர்தான் ‘Forest Man of India’ என்ற பெருமைக்கு உரியவர். இவர் அசாமில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஒரு அடித்தட்டு விவசாயியாகத் துவங்கிய இவரது இந்தப் பயணம் இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.

 

1,360 ஏக்கர் வனச் சரணாலயம்

 

ஜாதவ் பயேங்கின் இந்த சுற்றுச்சூழல் அறப்போராட்டமானது, 1979ம் ஆண்டு தொடங்கியது. ஜாதவ் தன்னுடைய 16-வது வயதில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தின் பேரழிவைக் கண்டார். மேலும், இந்த வெள்ளப் பாதிப்பின் தாக்கமானது, வன விலங்குகளையும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கியது.

 

பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஒரு தரிசு மணல்

 

வெள்ளத்தினால் இழந்த வாழ்விடத்தை மீட்டெடுக்கவும், விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானித்த கையிலெடுத்த ஜாதவ், பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஒரு தரிசு மணல் பரப்பில் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடங்கினார்.

 

தன்னுடைய முழு மன உறுதியுடன் வெறும் 20 மூங்கில் நாற்றுகளை மட்டுமே விதைத்துள்ளார். பின்னர் அதுவே, 1,360 ஏக்கர் வனச் சரணாலயமாக மாறுவதற்கான விதையாக மாறியுள்ளது.

 

ஒரு காலத்தில் வெட்டவெளி மணற்பரப்பாக இருந்த இந்த இடங்கள் தற்போது ஜாதவின் இடைவிடாத முயற்சியால் பசுமையான வனமாக மாறி உள்ளது. மேலும், இது வன விலங்குகள் மற்றும் பல்லுயிர் வளம் கொண்ட செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பாகவும் மலர்ந்துள்ளது. இந்த வனச்சரகம் ஜாதவின் நினைவாக, ‘மோலாய் காடு’ எனப் பெயரிடப்பட்டு யானைகள், மான்கள், காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் உள்ளிட்ட பல விலங்குகளுக்கான சரணாலயமாக விளங்குகிறது.

 

 ஜாதவ் பயேங்கின் இந்த அசாதாரண முயற்சி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது மற்றும் ‘காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட்’ விருது போன்ற மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

ஜாதவின் உத்வேகமான வாழ்க்கைக் கதை பல எல்லைகளைத் தாண்டி, இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

மூலக்கதை