4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. கரோனா பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. 

 

பின்னர், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து படிப்படியாக விமானச் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், சென்னை - மொரீசியஸ் - சென்னை இடையே வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஏர் மொரீசியஸ் விமான நிறுவனம் மீண்டும் விமானச் சேவையைத் தொடங்க முன்வந்தது.

 

 முதல் வாரத்தில் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் விமானச் சேவையைத் தொடங்குவது என்றும், பின்னர் பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து விமானச் சேவையை அதிகரிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. பயண நேரம் 5 மணி 45 நிமிடம் அதன்படி, சனிக்கிழமை நேற்று இந்த வாரத்தின் முதல் பயணிகள் விமானச் சேவை இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் பயண நேரம் 5 மணி 45 நிமிடங்கள். கட்டணம் ரூ. 26,406 என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை