அனல்மின் உற்பத்தி திறன் 5,120 மெகாவாட்டாக உயர்வு

தினமலர்  தினமலர்
அனல்மின் உற்பத்தி திறன் 5,120 மெகாவாட்டாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:தமிழக மின்வாரியத்தின், அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தித் திறன், 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

தமிழக மின்வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில், ஐந்து அனல்மின் நிலையங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், 10,158 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் திறனில், வடசென்னை - 3 அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுவே, மற்ற மின் நிலையங்களைவிட, அதிக திறன் உடையது. அங்கு இம்மாதம், 7ம் தேதி அதிகாரப் பூர்வமாக மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

இதையடுத்து, மின்வாரிய அனல்மின் நிலையங்களின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன், 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இந்த விபரத்தை, மின்வாரியத்தின் துணை நிறுவனமான மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தன், 'கிரிட் டீடெய்ல்ஸ்' எனப்படும் தினசரி மின் உற்பத்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துாத்துக்குடி 1,050சேலம், மேட்டூர் 840மேட்டூர் விரிவாக்கம் 600வட சென்னை 630வட சென்னை விரிவாக்கம் 1,200வட சென்னை 3 800 மொத்தம் 5,120

துாத்துக்குடி 1,050சேலம், மேட்டூர் 840மேட்டூர் விரிவாக்கம் 600வட சென்னை 630வட சென்னை விரிவாக்கம் 1,200வட சென்னை 3 800 மொத்தம் 5,120

சென்னை:தமிழக மின்வாரியத்தின், அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தித் திறன், 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.தமிழக மின்வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில், ஐந்து அனல்மின் நிலையங்கள்

மூலக்கதை