வெளியுறவு கொள்கை விளம்பரத்துக்கு அல்ல: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

தினமலர்  தினமலர்
வெளியுறவு கொள்கை விளம்பரத்துக்கு அல்ல: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு



புதுடில்லி, ''இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது, உலகளவில் விளம்பரப்படுத்துவதற்கு அல்ல,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி உடனான நேர்காணலின் போது, பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது:

நம்மிடம் உடன்படாத நாடுகளிடம் பேசி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா? வெளியுறவு கொள்கை என்பது, உலகளவில் விளம்பரத்துக்கு அல்ல.

நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

அதே போல், பாகிஸ்தானுடன் என்ன செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

பயங்கரவாதத்தை முன்னிறுத்தும் அந்நாடு, சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறது. பாக்., எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதால், சட்டப்பிரிவு 370ஐ நாம் அமல்படுத்தக் கூடாது என, எதிர்க்கட்சிகள் கருதுகின்றனவா?

எதிர்க்கட்சிகள் முதலில் வரலாற்றை படிக்க வேண்டும். ஷியாம பிரசாத் முகர்ஜி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோர் தங்களது கவலைகளை பகிர்ந்து கொண்டாலும், முன்னாள் பிரதமர் நேரு, பாக்., மற்றும் சீனா மீது போதுமான கவனம் செலுத்தவில்லை. இதனால், சுதந்திரத்துக்கு பின், 1962ல் போருக்கு வழிவகுத்தது.

கடந்த 1950களில், சீனாவால், அமெரிக்கா உடனான உறவை கெடுத்து கொண்டாம். எதிர்க்கட்சிகளிடம், 'சிந்தியா' என்ற கருத்து உள்ளது. அந்த வார்த்தையை யார் உருவாக்கினர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி, ''இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது, உலகளவில் விளம்பரப்படுத்துவதற்கு அல்ல,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி

மூலக்கதை