வாசலில் போட்டுட்டு போயிட்டாங்க: மம்தாவின் அசர வைக்கும் பதில்

தினமலர்  தினமலர்
வாசலில் போட்டுட்டு போயிட்டாங்க: மம்தாவின் அசர வைக்கும் பதில்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 ஏப்., 12ல் பிறப்பித்த உத்தரவில், 'ஒவ்வொரு கட்சியும் தனக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு?

'அதை யார் வழங்கியது, வங்கிக் கணக்கு விபரம் உட்பட அனைத்து விபரங்களையும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை தொடர்ந்து, பல கட்சிகள் விபரங்களை தாக்கல் செய்யவில்லை. சட்ட விளக்கங்கள் உட்பட பல காரணங்களை அவை கூறின.

'கட்சி அலுவலக வாசலில் போட்டுட்டு போயிட்டாங்க; தபாலில் அனுப்பினர்' என, பல காரணங்களை அவை கூறின.

ஆனால், மறக்காமல் அந்த பத்திரங்களை அந்தக் கட்சிகள் பணமாக்கியுள்ளன.

 தனக்கு கிடைத்த தேர்தல் பத்திர நன்கொடையில், 77 சதவீதத்தை லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் பெற்ற தி.மு.க., நன்கொடையாளர்கள் விபரங்களை சேகரித்தது. இதன்படி கிடைத்த தகவல்களை தேர்தல் கமிஷனில் பகிர்ந்துள்ளது

* மத்தியில் ஆளும் பா.ஜ., மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, நன்கொடையாளர் விபரத்தை வெளியிட மறுத்துள்ளது. நன்கொடையாளர் பெயர் வெளியிடப்படாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது

* காங்கிரஸ் கட்சி, எஸ்.பி.ஐ., வங்கியிடம் தகவல் கேட்டு கடிதம் அளித்தது. அந்த தகவல்கள் அனைத்தும் கட்சியிடமே உள்ளது என, வங்கி பதில் அனுப்பியது. மேலும் கட்சியின் வங்கிக் கணக்கு விபரங்களையும் அனுப்பி வைத்தது

* சமாஜ்வாதி கட்சி, 1 லட்சம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளது. ஆனால், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 பத்திரங்கள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. தபாலில் பெயர் குறிப்பிடாமல், அவை அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது

* தங்களிடம் தகவல் உடனடியாக இல்லை என, தெலுங்கு தேசம் கட்சி பதில் அனுப்பியது

* கட்சி அலுவலகத்தின் வெளியே உள்ள பெட்டியில் பத்திரங்கள் போடப்பட்டுள்ளதாக, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., கூறியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத சிலர், கட்சி அலுவலகத்தில் கொடுத்து சென்றதாகவும் அது கூறியுள்ளது. மொத்த தேர்தல் பத்திரங்களில் அதிக பலனடைந்த இரண்டாவது பெரிய கட்சி இது

* இது போன்ற தகவல்களை, கணக்குகளை நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. அதனால் தர இயலவில்லை என, சரத் பவார் தலைவராக இருந்தபோது தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது

* மொத்த நன்கொடையில், 1.5 கோடி ரூபாய்க்கான தகவல்கள் கிடைக்கவில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறியுள்ளது

* பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில், 2019ல் யாரோ ஒருவர், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் அடங்கிய உறையை கொடுத்து சென்றார். ஆனால், அது யார் அனுப்பியது என்று தெரியவில்லை என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.
ஆனால், மறக்காமல் அதை பணமாக்கியதாகவும் கட்சி கூறியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 ஏப்., 12ல் பிறப்பித்த உத்தரவில், 'ஒவ்வொரு கட்சியும் தனக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு?'அதை யார் வழங்கியது, வங்கிக் கணக்கு

மூலக்கதை