'டாஸ்மாக்' கடைகளில் 'ஜில்' பீர் எக்ஸ்ட்ரா ரூ.50 கேட்பதாக புகார்

தினமலர்  தினமலர்
டாஸ்மாக் கடைகளில் ஜில் பீர் எக்ஸ்ட்ரா ரூ.50 கேட்பதாக புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



சென்னை : தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 கடை கள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 60,000 பெட்டி பீர் மற்றும், 1.80 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. ஒரு பீர் பெட்டியில், 12 பாட்டில்கள்; மதுபான பெட்டியில், 48 'குவார்ட்டர்' பாட்டில்களும் உள்ளன.

கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எனவே, 'குடி'மகன்கள் பலரும் வெப்பத்தை தணிக்க, குளிர்ச்சியான பீர் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளில் தற்போது தினசரி பீர் விற்பனை, ஒரு லட்சம் பெட்டிகளை தாண்டி, 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்தி, மதுக்கடை ஊழியர்கள் குளிர்ச்சியான பீர் வழங்க, 'குடி'மகன்களிடம் பாட்டிலுக்கு, 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, 'குடி'மகன்கள் கூறியதாவது:

பீர் குளிர்ச்சியாக தான் குடிக்க முடியும். வழக்கமாக, ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பர்; தற்போது, பீருக்கு தேவை அதிகரித்துள்ளதால், பலரும் அதை வாங்குகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி குளிர்ச்சியான பீர் வழங்க, 50 ரூபாய் கூடுதலாக கேட்கின்றனர். அதை தர மறுத்தால், குளிர்ச்சி இல்லாத பீர் வழங்குகின்றனர்.

இதுகுறித்து, ஊழியர்களிடம் கேட்டால், 'மது கடைக்கான மின் கட்டண செலவு மற்றும், குளிர்ப்பதன பெட்டி பராமரிப்பு செலவை நாங்கள் தான் செய்கிறோம்; அவற்றுக்கு, நிர்வாகம் பணம் தருவதில்லை; அதற்காக தான் உங்களிடம் வசூலிக்கிறோம்' என்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊழியர்களிடம் கேட்ட போது, 'ஒரு பாட்டிலுக்கு, 50 ரூபாய் அளவுக்கு எல்லாம், கூடுதல் பணம் வசூலிப்பதில்லை; 'குடி'மகன்கள் விரும்பி தருவதை வாங்குகிறோம்' என்றனர்.

டாஸ்மாக் ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளை கொள்முதல் செய்கிறது. பல மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில், குடிமகன்கள் அதிகம் விரும்பி வாங்கும் பீர் வகைகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுகின்றன. இதற்கு மாவட்ட மேலாளர்கள், கிடங்குகளில் இருந்து, அனைத்து பீர் வகைகளையும் அனுப்பாமல், தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களின் பீரை மட்டும் கடைக்கு அனுப்புவதே காரணமாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, டாஸ்மாக் ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்பது குடிமகன்கள் மற்றும் ஊழியர்களின் விருப்பமாக உள்ளது.



சென்னை : தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 கடை கள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 60,000 பெட்டி பீர் மற்றும், 1.80 லட்சம் பெட்டி

மூலக்கதை