லோக்சபா தேர்தல்: வேட்பு மனு தாக்கல் துவங்கியது

தினமலர்  தினமலர்
லோக்சபா தேர்தல்: வேட்பு மனு தாக்கல் துவங்கியது

சென்னை:தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகள், காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதி மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதியில், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வேட்பாளருடன் அதிகபட்சம் நான்கு பேரை மட்டுமே, மனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்ரல், 19 தேர்தல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு



இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. வரும், 27ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். தினமும் காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரை, வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் நடக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் துாரத்திற்குள், வாகனங்கள் நுழையாமல் இருக்க, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கலின் போது, பல்வேறு விதிமுறைகளை பின்பற்றும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.


தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள், டிபாசிட் தொகையாக, 25,000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தால், 12,500 ரூபாய் செலுத்த வேண்டும்.



வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில், பூத் சிலிப் வழங்கப்படும். இவற்றை அச்சிடும் பணி வரும் 30ம் தேதி துவங்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவர்.



தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவிகளில் இருந்தால், அந்தப் பதவியை தேர்தலுக்கு முன் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின், ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்தால் போதும். ஆனால், வாரிய தலைவர் உட்பட அரசால் நியமிக்கப்பட்ட பதவிகளில் இருப்போர், தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், அப்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.



சென்னை:தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகள், காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதி மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதியில், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வேட்பாளருடன்

மூலக்கதை