அதிகாலை 5:51 - காலை 6:10 மணிக்குள்..: ஏப்.23ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

தினமலர்  தினமலர்
அதிகாலை 5:51  காலை 6:10 மணிக்குள்..: ஏப்.23ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை : மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,19ல் துவங்கி 28 வரை நடக்கிறது.

ஏப்.,19 மாலை 6:30 மணிக்கு மேல் இரவு 7:15 மணிக்குள் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். திருவராதனம் முடிந்து சன்னதிக்கு திரும்புகிறார். ஏப்.,21 வரை இம்மண்டபத்தில் சுவாமி தினமும் எழுந்தருளுகிறார். ஏப்.,21 மாலை 6:10 மணிக்கு மேல் 6:25 மணிக்குள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து சுவாமி மதுரைக்கு புறப்படுகிறார்.

ஏப்.,22ல் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. ஏப்., 23 அதிகாலை 5:51 முதல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் முடிந்து இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு செல்கிறார்.

ஏப்.,24 காலை சேஷ வாகனத்தில் வைகை தேனுார் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மதியம் கருடவாகனத்தில் அலங்காரமாகி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார்.

இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்.,25 அதிகாலை மோகினி அலங்காரத்திலும், மதியம் ராஜாங்க அலங்காரத்திலும் எழுந்தருளுகிறார். பின்னர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பட்டு, இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.

ஏப்.,27 காலை 10:32 மணி முதல் 11:00 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.

ஏப்.,28 உற்ஸவம் நிறைவு பெறகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணைகமிஷனர் கலைவாணன் செய்து வருகின்றனர்.

மதுரை : மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,19ல் துவங்கி 28 வரை நடக்கிறது.ஏப்.,19 மாலை 6:30 மணிக்கு மேல் இரவு 7:15 மணிக்குள் தோளுக்கினியானில் திருக்கல்யாண

மூலக்கதை