ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன், தமிழ், மலையாளம், இந்திப் படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன், துப்பாக்கி உட்படப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

விருது பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர்

 

உருமி உட்படச் சில படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு, இப்போது பியர்ரி ஆஞ்சினியக்ஸ் (Pierre Angenieux) என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 சர்வதேச அளவில் திறமையான, ஒட்டுமொத்த ஒளிப்பதிவு பங்களிப்புக்காக வழங்கப்படும் விருது, இது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மே 24-ம் தேதி பிரான்ஸில் நடைபெறும் கான் திரைப்பட விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை இதற்கு முன், புகழ்பெற்ற பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் பிலிம் ரூஸலாட், அமெரிக்க ஒளிப்பதிவாளர் வில்மோஸ் சிக்மண்ட் , ரோஜர் , கிறிஸ்டோபர் டாய்ல் உட்படப் பலர் பெற்றுள்ளனர்.

மூலக்கதை