உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போது தான் உலக கோப்பையை முழுக்க முழுக்க இந்தியா தனது மண்ணில் நடத்துகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை 13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரானது, சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதில், காயத்திலிருந்து மீண்டுள்ள கே.எல். ராகுலும் இடம்பெற்றுள்ளார்.  இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. அதே சமயம் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சஹாலுக்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர்கள் இல்லாத அணி இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசியாக இதே போல கடந்த 2003 உலகக் கோப்பை தொடரின்போது தமிழக வீரர்கள் இடம்பெறாத இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் பிறகு 2007, 2011, 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அனுபவ ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வினுக்கு உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் அழுத்தமாக சொல்லி வருகின்றனர். இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷான்,  சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்,  குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ். ஆகிய 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போது தான் உலக கோப்பையை முழுக்க முழுக்க இந்தியா தனது மண்ணில் நடத்துகிறது.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை 13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.இந்த உலகக் கோப்பை தொடரானது, சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதில், காயத்திலிருந்து மீண்டுள்ள கே.எல். ராகுலும் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. அதே சமயம் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சஹாலுக்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.


தமிழக வீரர்கள் இல்லாத அணி

இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசியாக இதே போல கடந்த 2003 உலகக் கோப்பை தொடரின்போது தமிழக வீரர்கள் இடம்பெறாத இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் பிறகு 2007, 2011, 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அனுபவ ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வினுக்கு உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் அழுத்தமாக சொல்லி வருகின்றனர்.


இந்திய அணி விவரம்:

 
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷான்,  சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்,  குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ். ஆகிய 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மூலக்கதை