''அதனால்தான் படங்களில் நடிப்பதை குறைத்தேன்'' - சமந்தா

சென்னை,கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ''குஷி'' படத்திற்கு பிறகு சமந்தா தென்னிந்திய படங்களில் கதாநாயகியாக தோன்றவில்லை. ''மா இன்டி பங்காரம்'' என்ற படத்தை அவர் தயாரித்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டாலும், படப்பிடிப்பு துவங்கவில்லை. சமீபத்தில் தனது சொந்த தயாரிப்பில் உருவான ''சுபம்'' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனால், சமந்தா நடிக்காததற்கான காரணம் என்ன என்பது பற்றிய விவாதம் தொடங்கியது. இறுதியாக, சமந்தா இந்த இடைவெளி குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார். தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பணியாற்றிய சமந்தா, இப்போது சினிமா வாழ்க்கையுடன் தனது ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வதாகக் கூறினார். அதனால்தான் படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார். தற்போது தனது கவனம் முழுவதும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் இருப்பதாகவும், ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார். கடைசியாக பாலிவுட்டில் சமந்தா, ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரின் இந்தி பதிப்பான 'சிட்டாடல் ஹனி பனி'-ல் நடித்திருந்தார். தற்போது பிரஜ் மற்றும் டிகே தயாரிக்கும் ர'ரக்ட் பிரம்மாண்ட்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
மூலக்கதை
