இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை: எலான் மஸ்க்கிற்கு ஏமாற்றம்

மும்பை, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், உலகம் முழுவதும் மின்சார வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2003-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக எலான் மஸ்க் இயங்கி வருகிறார். தற்போது சந்தையில் பல்வேறு மாடல் கார்களை டெஸ்லா விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்தும் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது. இதற்கு வரி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இருந்தது. இதையடுத்து ஒரு வழியக கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தைக்குள் டெஸ்லா கால் பதித்தது. மும்பையில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் திறந்து வைத்தது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ‘ஒய்’ மாடல் கார்களை அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவு உடனடியாக தொடங்கியது. டெஸ்லா கார்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில், தற்போது வரை வெறும் 600 கார்கள் மட்டுமே முன்பதிவு ஆகியுள்ளது. இது எலான் மஸ்க்கிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், இந்தியாவில் சார்ஜிங் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் போது எலக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
மூலக்கதை
