தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான காற்றாலைகள்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் காற்றாலை இறக்கைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்கு வசதியான எந்திரங்கள், இடவசதி உள்ளதால் ஆண்டுதோறும் வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து காற்றாலை இறக்கைகள் கையாளுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டுவரை 1,099 இறக்கைகள் கையாளப்பட்டன. இந்தாண்டு இதுவரை 1,158 காற்றாலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 5 சதவீதம் அதிகமாகும். இந்தநிலையில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சுமார் 59.18 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகள் எம்.வி. பி.பி.சி சந்தியாகு என்ற கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு ஒரே கப்பலில் 75 இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடக்கத்தக்கது.
மூலக்கதை
