''காரோ, வீடோ வாங்க இல்லை...என் அப்பா சம்பாதிக்கும் எல்லாமே அதற்குத்தான்''- ஸ்ருதிஹாசன்

  தினத்தந்தி
காரோ, வீடோ வாங்க இல்லை...என் அப்பா சம்பாதிக்கும் எல்லாமே அதற்குத்தான் ஸ்ருதிஹாசன்

சென்னை,''தக் லைப்'' படத்தில் கடைசியாக நடித்திருந்த கமல்ஹாசன், அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பரிவை இயக்குனர்களாக அறிமுகப்படுத்தி அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஒரு நேர்காணலில் தனது தந்தையை பற்றி பேசினார். ''தக் லைப்'' படத்தின் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் மனநிலை குறித்து கேட்டபோது, படத்தின் தோல்வி தனது தந்தையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று ஸ்ருதிஹாசன் கூறினார். மேலும், அவர் சம்பாதிக்கும் பணத்தில் கார் வாங்கவோ, வீடு வாங்கவோ விரும்பவில்லை எனவும் எல்லாம் படங்களுக்கு செல்கிறது என்றும் கூறினார். கூலி படத்தில் கடைசியாக நடித்திருந்த ஸ்ருதி ஹாசன் , அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் 'டிரெய்ன்' படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை