‘அந்த படம் வந்ததற்கு பிறகு, தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள்..'- நோரா படேஹி

சென்னை, பயமும், சிரிப்பும் இணைந்த 'காஞ்சனா' பட வரிசையில் தொடர்ந்து 3 பாகங்களை இயக்கி, நடித்த ராகவா லாரன்ஸ், தற்போது 'காஞ்சனா-4' படத்தை உருவாக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் உடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பாலிவுட் கவர்ச்சி நடிகையான நோரா படேஹி, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். இதற்கிடையில் காஞ்சனா-4 படம் பற்றி அவர் பேசும்போது, ''இது எனக்கு தமிழில் முதல் படம். இந்த படம் வந்ததற்கு பிறகு, தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள். இவரை 'புக்' பண்ணுங்க... என்று படக்குழு அலைய போகிறது'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். அப்படி என்ன வித்தையை காட்டப்போகிறாரோ... என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மூலக்கதை
