அர்ஜுனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

  தினத்தந்தி
அர்ஜுனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

சென்னை, தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சுபாஷ் கே ராஜ் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை இயக்கிய ஏஜிஎஸ் நிறுவனம் இயக்க உள்ளது. அப்பா - மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இப்படம் உருவாக உள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது. இந்த படத்திற்கு கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார். இந்த நிலையில், அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நேற்று தொடங்கியது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Kicking off #AGS28 in style, quite literally Happy to announce our next production #AGS28 with the “Action King” @akarjunofficial @abhiramiact & @preitymukhundan , directed by @subashraj1197 ♥️@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh pic.twitter.com/k7dc3ilTd1

மூலக்கதை