'கேப்டன் பிரபாகரன்-2' படத்தை எடுக்க ஆசையாக இருக்கிறது- ஆர்.கே.செல்வமணி

  தினத்தந்தி
கேப்டன் பிரபாகரன்2 படத்தை எடுக்க ஆசையாக இருக்கிறது ஆர்.கே.செல்வமணி

சென்னை, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 100-வது படம் கேப்டன் பிரபாகரன். படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் பிரபாகரன் படம் மீண்டும் வருகிற 22-ந்தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் புரொமோஷன் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தநிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே.செல்வமணி, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து கேப்டன் பிரபாகரன்-2 படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என்னை வளர்த்த விஜயகாந்த்துக்கு நன்றி கடனாக இதை செய்ய விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.

மூலக்கதை