உடல் நலம் சரியாகி மீண்டும் நடிக்க வரும் மம்முட்டி: ரசிகர்கள் உற்சாகம்

  தினத்தந்தி
உடல் நலம் சரியாகி மீண்டும் நடிக்க வரும் மம்முட்டி: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை, நடிகர் மம்முட்டி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் சினிமா நடிப்பில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வரும் நிலையில் மம்முட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். சென்னையில் ஓய்வு எடுத்து வரும் மம்முட்டி விரைவில் கேரளா செல்ல இருக்கிறார். செப்டம்பர் மாதம் முதல் மகேஷ் நாராயணனின் புதிய படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் மம்முட்டி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மம்முட்டி நடிக்கும் புதிய படத்திற்கு 'எம்.எம்.எம்.என்.' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மோகன்லால், பகத் பாசில், நயன்தாரா, குஞ்சாக்கோ போபன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

மூலக்கதை