ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் தங்கம் வென்றார்

  தினத்தந்தி
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் தங்கம் வென்றார்

ஷிம்கென்ட், 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்களுக்கான ஸ்கீட் பந்தயத்தின் இறுதி சுற்று நேற்று நடந்தது. தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்த இந்திய வீரர் அனந்த்ஜீத் சிங் நருகா 57-56 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் ஆசிய விளையாட்டு சாம்பியனான அல் ரஷிதியை (குவைத்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அனந்த்ஜீத் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் வென்ற முதல் தங்கமாகும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி- சுருச்சி சிங் ஜோடி 17-9 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேவின் லியு ஹெங் யு- ஹிசை ஹிசியாங் சென் ஜோடியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.

மூலக்கதை