அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட பென் ஷெல்டன் ஜோடி

  தினத்தந்தி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட பென் ஷெல்டன் ஜோடி

நியூயார்க், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் - பென் ஷெல்டன் ஜோடி, சக நாட்டி ஜோடியான கிறிஸ்டியன் ஹாரிசன் - டேனியல் காலின்ஸ் உடன் மோதியது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்டியன் ஹாரிசன் - டேனியல் காலின்ஸ் ஜோடி 4-1, 5-4 (7-2) என்ற செட் கணக்கில் டெய்லர் டவுன்சென்ட் - பென் ஷெல்டன் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மூலக்கதை