3வது முறை - சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்ற முகமது சாலா

லண்டன், எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலா (33) இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலிஷ் பிரீமியர் லீக் தொடரின் கடந்த சீசனில் முகமது சாலா 29 கோல்கள், 18 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார். இந்நிலையில், பிஎப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை சாலா மூன்றாவது முறையாக வென்று அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக பல வீரர்கள் இந்த விருதை இரண்டு முறை வாங்கியுள்ளார்கள். ஆனால், சாலா முதல்முறையாக 3 முறை வாங்கி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2018 மற்றும் 2022ல் அவர் அந்த விருதை வென்றிருந்தார்.
மூலக்கதை
