அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் தோல்வி கண்ட அலீபெக் கம்சமேவ்

  தினத்தந்தி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் தோல்வி கண்ட அலீபெக் கம்சமேவ்

நியூயார்க், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்சின் டிட்டவன் ட்ராகுட் - ரஷியாவின் அலீபெக் கம்சமேவ் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டிட்டவன் ட்ராகுட் 6-1, 4-2 என்ற செட் கணக்கில் அலீபெக் கம்சமேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மூலக்கதை