ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் நருகாவுக்கு தங்க பதக்கம்

  தினத்தந்தி
ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் நருகாவுக்கு தங்க பதக்கம்

ஷிம்கென்ட், ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் ஆனந்த் ஜீத் சிங் நருகா (வயது 27), ஸ்கீட் பிரிவின் இறுதி போட்டியில் இன்று தங்க பதக்கம் வென்று உள்ளார். குவைத் நாட்டின் மன்சூர் அல் ரஷீதியை 57-56 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதனால், மன்சூருக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடித்த கத்தார் நாட்டின் அல்-இஷாக் அலி அகமதுவுக்கு (43 புள்ளிகள்) வெண்கல பதக்கமும் கிடைத்தது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவரான நருகாவுக்கு, சர்வதேச அளவிலான போட்டி தொடரில், ஒட்டுமொத்தத்தில் கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும். 2023-ம் ஆண்டு நடந்த போட்டியில் கலப்பு அணி பிரிவிலும் மற்றும் அணி பிரிவிலும் அவர் தங்க பதக்கம் வென்றார்.

மூலக்கதை