துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ''கூலி'' பட நடிகைகள்?

சென்னை,தெலுங்கில் மகாநதி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது மீண்டும் தெலுங்கில் ''ஆகாசம்லோ ஓகா தரா'' மற்றும் அறிமுக இயக்குனர் ரவி நெலகுடிட்டியுடன் தனது 41-வது படத்திலும் நடிக்கிறார். இப்போது இப்படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ''ஆகாசம்லோ ஓகா தாரா'' படத்தில் ஏற்கனவே சாத்விகா வீரவள்ளி கதாநாயகியாக நடிக்கும்நிலையில், தற்போது ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. மறுபுறம், அறிமுக இயக்குனர் ரவி நெலகுடிட்டி இயக்கும் துல்கர் சல்மானின் 41 -வது படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் படத்தில் இணைந்துள்ள 2 நடிகைகளும் சமீபத்தில் வெளியான கூலி படத்தில் நடித்திருந்தார்கள். அதில், ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தநிலையில், பூஜா ஹெக்டே ''மோனிகா'' பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
மூலக்கதை
