விஜய் ஆண்டனியுடன் மோதும் கவின்...

சென்னை,பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள 'கிஸ்' படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானநிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வெளியாக உள்ளது.மறுபுறம், விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ''சக்தித் திருமகன்'' படமும் அதே தேதியில்தான் வெளியாக இருக்கிறது. முன்னதாக இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 19ம் தேதி தள்ளிப்போனது. இந்த படத்தை அவரே தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தெலுங்கில் 'பத்ரகாளி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மூலக்கதை
