பிரீத்தி முகுந்தன் படத்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர்

  தினத்தந்தி
பிரீத்தி முகுந்தன் படத்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர்

சென்னை,தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் பிரீத்தி முகுந்தன், தற்போது மற்றொரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்நிறுவனத்தின் 28-வது படமாகும். இப்படத்தை இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் இயக்குகிறார். இப்படத்தில் அர்ஜுன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கேஜிஎப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.Super happy and excited to announce our next #AGS28 , launching our super talented debut director @subashraj1197 , starring the one and only Action King @akarjunofficial sir, the fabulous @abhiramiact & the super talented @preitymukhundan ♥️ with music by the iconic @RaviBasrur !… pic.twitter.com/SVfxdPZ9fi

மூலக்கதை