''இளமை காலத்தில் அதை காட்ட...'' - சன்னி லியோன் பரபரப்பு பேட்டி

  தினத்தந்தி
இளமை காலத்தில் அதை காட்ட...  சன்னி லியோன் பரபரப்பு பேட்டி

மும்பை,பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த ''ஜிஸம் 2'' திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கலக்கி வந்தார். தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சன்னி லியோன், சின்ன வயதில் தன் கால்களை வெறுத்ததாக கூறினார். அவர் கூறுகையில், ''நான் சின்ன வயதிலிருந்தபோது என் கால்களை எனக்குப் பிடிக்காது. ஏனென்றால், நான் வெளிர் நிறம் கொண்ட ஒரு பெண். ஆனால் நான் சென்றது முழுக்க வெண்மை நிறத்தினர் அதிகம் இருந்த பள்ளி. அங்குள்ள பெண்களுக்கு வெளிர் நிற முடி இருந்தது. ஆனால் எனக்கு இருந்தது கருமையான முடி. அதனால் என் கால்களை காட்ட பிடிக்கவில்லை.வயது கடந்த பிறகு நான் உணர்ந்தேன், இது பெரியதாக நினைக்க வேண்டிய விஷயமில்லை என்று. இப்போது ஷார்ட், ஸ்கர்ட் போடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை'' என்றார்.

மூலக்கதை