எஸ்.எஸ்.ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி வரிசையில் லோகேஷ் கனகராஜ்

  தினத்தந்தி
எஸ்.எஸ்.ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி வரிசையில் லோகேஷ் கனகராஜ்

சென்னை,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமான ''கூலி''யை உருவாக்கினார். கடந்த 14-ம் தேதி வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், 5 நாட்களில் உலகளவில் ரூ. 400 கோடி வசூலித்தது. இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து 3 முறை (ஹாட்ரிக்) ரூ. 400 கோடி வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனரின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த சாதனையை படைத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் லியோ ஆகியவை அவரின் முந்தைய படங்களாகும். பாகுபலி: தி பிகினிங், பாகுபலி: தி கன்க்ளூஷன் மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த எஸ்எஸ் ராஜமவுலியும் இந்த பட்டியலில் இருக்கிறார். இதேபோல், பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு மற்றும் டன்கு ஆகிய படங்களுடன் இந்த பட்டியலில் இருக்கிறார். லோகேஷ் அடுத்ததாக கைதி 2, ரோலக்ஸ் , விக்ரம் 2 மற்றும் ஆமிர் கானுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பெரிய படங்களை வைத்திருக்கிறார். இதற்கிடையில், ரஜினி-கமலை வைத்து அவர் ஒரு கேங்க்ஸ்டர் படம் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை