தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்திய ட்ரெண்ட் ராக்கெட்ஸ்

லண்டன், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் - ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின. இந்த மோதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 74 பந்துகளில் 3 விக்கெட்டை இழந்து 101 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மூலக்கதை
