அசோக் செல்வனின் புதிய படம்.. பூஜையுடன் தொடங்கியது

சென்னை, தமிழில் 'சூதுகவ்வும்' படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான தக் லைப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்துவருகிறார். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வனின் புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடிக்க உள்ளார்.Driven by ideas, fueled by fresh stories! A refreshing collaboration✨ and a promising beginning as @VelsFilmIntl joins hands with @MillionOffl @IshariKGanesh @kushmithaganesh@Yuvrajganesan Starring @AshokSelvan #NimishaSajayan !! Directed by @cbmanikandan A… pic.twitter.com/ioId3kGRaI
மூலக்கதை
