இலங்கையில் பொறியில் சிக்கிய சிறுத்தை குட்டி: தோட்ட உரிமையாளர் கைது! - லங்காசிறி நியூஸ்

இலங்கையில் சிறுத்தை ஒன்று பொறியில் சிக்கிய நிலையில் அதை வனத்துறை அதிகாரிகள் மீட்டு விடுவித்துள்ளனர். இலங்கையின் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்டறி தோட்டத்தில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தை குட்டி பொறியில் சிக்கியுள்ளது.இது தொடர்பான தகவலறிந்த பொலிஸார், நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பொறியில் சிறுத்தை மீட்டு பாதுகாப்பாக விடுவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பொறி வைத்த நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை சிக்கிய பொறி காட்டு விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
