ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது. கடந்த 8ம் தேதி வரலாற்றில் உயர்ந்த உட்சபட்ச இந்த விலை உயர்வை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை இறங்கு முகத்தில் காணப்பட்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரத்தின் முதல் நாளான நேற்றும் (18-08-2025) தங்கம் விலை மாறவில்லை. இதன்படி நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.9,275-க்கும், ஒரு சவரன் ரூ. 74,200-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9.235க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,880 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 126க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 19.08.2025 ஒரு சவரன் ரூ.73,880 (இன்று) 18.08.2025 ஒரு சவரன் ரூ.74,200 (நேற்று) 17.08.2025 ஒரு சவரன் ரூ.74,200 16.08.2025 ஒரு சவரன் ரூ.74,200 15.08.2025 ஒரு சவரன் ரூ.74,240 14.08.2025 ஒரு சவரன் ரூ.74,320

மூலக்கதை