இலங்கையில் திடீரென தீப்பற்றிய பேருந்து: யாழ்ப்பாணத்தில் பரபரப்பு - லங்காசிறி நியூஸ்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம்(16) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. நல்லூர்-கிட்டுப்பூங்கா பகுதிக்கான சேவையை வழங்கி வந்த பேருந்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுவரை தீ விபத்திற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
