ரஜினியுடன் நடித்த ஹிருத்திக் ரோஷன்...எந்த படத்தில் தெரியுமா?

சென்னை,ஆகஸ்ட் 14 (நாளை) சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு இரு பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி மற்றும் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2. இவ்விறு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், ரஜினிகாந்தும் , ஹிருத்திக் ரோஷனும் ஒரு படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், இருவரும் 1986-ம் ஆண்டு வெளியான ''பகவான் தாதா'' படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை ஹிருத்திக்கின் தாத்தா ஜே. ஓம் பிரகாஷ் இயக்கினார்.
மூலக்கதை
