அவருடன் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - சிம்ரன்

  தினத்தந்தி
அவருடன் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்  சிம்ரன்

சென்னை,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது சசிகுமாருடன் அவர் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை சிம்ரன் சசிகுமார் உடன் ஜோடியாக நடித்தது குறித்து பேசியுள்ளார். அதாவது, "நல்ல குடும்பக் கதையாக இருந்ததால் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடிக்க உடனடியாக சம்மதித்தேன். அதுமட்டுமல்ல அதற்கு இன்னொரு காரணமும் உண்டு அதற்கு முக்கிய காரணம் சசிகுமார் தான். மிகப்பெரிய இயக்குனரும் நடிகருமான அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமைதான். அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான் என நினைக்கிறேன். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் இருக்க கூடாது. திறமைக்கு முதலிடம் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மூலக்கதை