'இது என்னுடைய மைதானம்' கே.எல்.ராகுலை ஜாலியாக கலாய்த்த விராட் கோலி.. வீடியோ வைரல்

  தினத்தந்தி
இது என்னுடைய மைதானம் கே.எல்.ராகுலை ஜாலியாக கலாய்த்த விராட் கோலி.. வீடியோ வைரல்

புதுடெல்லி, 18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் புவனேஸ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குருனால் பாண்ட்யா 73 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்னதாக நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியை கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் அடித்து 'இது என்னுடைய மைதானம்' என்று கூறி ஆக்ரோஷமாக கொண்டாடினார்.இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்ற பின்னர், கே.எல்.ராகுலை சந்தித்த விராட் கோலி இந்த கொண்டாட்டத்தை செய்து ஜாலியாக கிண்டலடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Virat Kohli doing 'This is my ground' celebration in front of KL Rahul. #ViratKohli #RCBvDC #DCvRCBpic.twitter.com/kr5QyEbaMa

மூலக்கதை