திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு மம்முட்டி வாழ்த்து

  தினத்தந்தி
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு மம்முட்டி வாழ்த்து

திருவனந்தபுரம், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், வருகிற 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த 50 ஆண்டுகளில் அவர் இதுவரை 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 'கூலி' அவரது 171-வது திரைப்படமாகும். இந்த நிலையில், ரஜினிக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு மம்முட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே ஒரு மரியாதை. கூலி படத்துக்கு வாழ்த்துகள். எப்போதும் உத்வேகமாகவும் பிரகாசமாகவும் இருங்கள்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.Heartfelt congratulations to dear @rajinikanth on completing 50 glorious years in cinema. It was truly an honour to share the screen with you. Wishing you the very best for #Coolie. Keep inspiring and shining always. pic.twitter.com/EG8GPD4vzS

மூலக்கதை